Wednesday, 9 February 2011

இரண்டாம் களப்பிரர் காலம்...

சினிமா ஆட்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடக்கும் ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். நடிகர்கள் என்பவர்கள் நடிப்பவர்களே, அவர்களுக்கு அரசியலில் நல்லவர்கள் போல நடிப்பதற்கு பெரிய கஷ்டம் ஏதும் இருக்காது. இவர்களுக்கு தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் என்ன அக்கரை இருக்கிறது என்று தான் தெரியவில்லை. இவர்கள் படங்களில் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிற மொழிகழந்து தான் தமிழை பேசுவார்கள் அந்த அளவுக்கு தமிழ் மொழி மீது பற்று. பல நடிகர்களுக்கு இன்னும் தமிழே தெரியாது ஆனால் அவர்கள் தான் தமிழரை பற்றி அதிகம் பேசுவார்கள்(குஷ்பூ- இவர் தமிழ் குடும்பங்கள் உருப்பட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்).

படத்திற்கு வசனம் எழுதியதற்கு பரிசு "தமிழக முதல்வர்" பதவி. எவ்வளவு பெரிய பரிசு. நாம் படித்த வரையில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கூட நாட்டை ஆளவில்லை. ஆனால் படத்துக்கு வசனம் எழுதியவர் நாட்டை ஆள்கிறார். படத்தில் நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற முடிவில் பல நடிகர்கள் உலவுகிறார்கள்.

நாட்டை ஆள்வதோடு மட்டும் நிற்ப்பதில்லை ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள் தான். இன்றைய கட்சிகளில் பல கட்சிகள் இவர்கள் கையில் தான்.
Forward block -Karthi
சமத்துவ மக்கள் கட்சி- நடிகர் சரத்குமார்
லச்சிய திராவிடர் முன்னேற்ற கழகம்- நடிகர் டி. ராசேந்திரன்
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்- நடிகர் விஜயகாந்த்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்- நடிகையாய் இருந்த செல்வி ஜெயலலிதா
திராவிட முன்னேற்ற கழகம் -வசனம் எழுதிய கருணாநிதி
நாம் தமிழர்- நடிகர் சீமான்

இப்படி பல கட்சிகள் சினிமாவின் பிடியில். கட்சிகள் மட்டும் இவர்கள் கையில் இல்லை, பல MP, MLA என்று சுற்றுகிறார்கள்.
நெப்போலியன், ரித்திஷ், எஸ். வீ. சேகர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் ஒன்று பட்டு நின்றாலும் இவர்கள் ஒருபோதும் ஒன்று படமாட்டார்கள்.

வெள்ளையன் வெளியேறிய பிறகு ஆரியர் ஆதிக்கம், பார்ப்பனர் ஆதிக்கம், இன்று சினிமா ஆதிக்கம். இப்படி நம்மீது யாரவது ஒருவர் ஆதிக்கம் செலுத்திக்கொண்டே தான் இருக்கிறார்களே ஒழிய நாம் அடிமை என்ற நிலைமை நீங்கவில்லை. உலக தமிழர்களின் தலைஎழுத்தை எழுதுவதே இந்த சினிமாதான் என்பதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழர்கள் நிழலுக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு அறியாதவர்கள் அல்ல. நம்மை சினிமாவால் திறமையாக நம்பவைக்கிறார்கள் என்பதே உண்மை. என்னதான் செய்வது, நம் வாக்குரிமையை நமது கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்கு பதிலாக நமக்கு பிடிக்காத கட்சி வரகூடாது என்பதற்காகவாவது அனைவரும் தம் ஓட்டு உரிமையை பயன்படுத்த வேண்டும்.

வரும் பதிவுகளில் நடிகர்களின் பல சிறப்பு அமசங்களை காண்போம்....

No comments:

Post a Comment