Wednesday, 16 February 2011

களப்பிரர் காலம்-2

இலச்சிய திராவிட முன்னேற்ற கழகம்

இந்த கட்சியின் தலைவர் T.R என்று தமிழ் மக்களால் போற்றப்படும் ஒரு நடிகர். இவரது கட்சிக்கு மட்டும் தான் இலச்சியம் இருப்பதை போன்று இலச்சியம் என்ற வார்த்தையை இவர்கட்சி பெயரிலேயே வைத்துள்ளார். இவரது சிறப்பே இவரது அடுக்கு மொழி. அடுக்கு மொழியால் பேசினால் ஆட்சியை கைபற்றி விடலாம் என்பதை முதலில் நம்மிடையே அறிமுகப் படுத்தியவர் அண்ணா. படத்தில் நடித்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று நம்மிடம் அறிமுக படுத்த்தியவர் MGR. புத்திசாலியான இவர் அடுக்கு மொழியால் பேசுவது, படத்தில் நடிப்பது என்று இரெண்டையும் கலந்து இவரது இலச்சியத்தை நோக்கி நகர்கிறார். ஆனால் இவர் இவரது இலச்சியத்தை கட்சி தொண்டர்களுக்கு கூட தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளார் என்பது இந்த கட்ச்சியின் பெரிய சிறப்பு.

இவரது சிறப்புகளை இவரது அடுக்கு மொழிகளை போலவே அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் அந்த காலத்திலேய தொட்டான்குச்சியைய் தட்டிப்பார்த்து அண்ணன் தங்கை பாசத்தை தமிழர்களுக்கு உணர்த்தி பலத்த கைதட்டலை பெற்றவர். இவர் சகல கலா வல்லவர், அதாவது ஆடுவது பாடுவது, நடிப்பது, பேசுவது, அரசியல் என இவர் கால் பதிக்காத துறையே இல்லை. அதனால் இவரை பார்த்த பலரும் அண்டார்டிகாவில் இருந்து வந்த அதிசய பிறவியை பார்ப்பதை போலவே பார்கிறார்கள்.

இவர் நடித்த படம் ஒன்றில் ஒரு சண்டையின் போது இவர் சொன்ன "வாடா ஏ மச்சி; வாழைக்க பஜ்ஜி" என்ற அடுக்கு மொழி அனைத்து தமிழர்களின் மனதிலும் பசுமரத்து ஆணி போல் பதிந்தது. எங்கேயாவது சண்டை நடந்தால் கூட மக்கள் இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லியே பிறகே சண்டைக்கு போகிறார்கள் என்று பல செய்திகள் நமக்கு கிடைக்கிறது. இப்படி சிறப்பு மிக்க இவர் வாரம் தோறும் அரட்டை அரங்கம் என்னும் நிகழ்ச்சியில் தோன்றி சன்டிவிக்கு சிறப்பு செய்கிறார்.

இவர் மகன் நடித்த படம் ஒன்றில் இவர் பாடிய பாட்டு இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கது. "யம்மாடி, ஆத்தாடி உன்னே எனக்கு தரியாடி; நீ பாதி நான் பாதி .....; அரச்ச மாவ அரப்போமா? தொவச்ச துணிய தொவப்போமா?;....." என்று தமிழர்களை பார்த்து இவர் கேட்டவுடன், திரை அரங்கில் இருந்த தமிழர்கள் யம்மாடி ஆத்தாடி என்று அலறி அடித்து ஓடினர்.

இப்படி தமிழர்களின் அறிவு வளர அறிவு சார் அடுக்குமொழிகள் பலவற்றை இவர் பேசுவதால் இவர் தமிழகத்தை ஆழ தகுதி உடையவர் ஆகிறார். ஆகையால் இவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்துக்கு தொண்டாற்றி வருகிறார்.

FORWARD BLOCK:

இப்படி ஒரு கட்சி இருப்பது பல நாள் ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு அரசியலை பற்றி தெரியா விட்டாலும் ஆட்ச்சியை பிடிக்க வேண்டும் என்று அயராது உழைப்பவர்.

இது போன்ற கூத்தாடிகளே தமிழக அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பது எமக்கு வேதனை அளிக்கிறது. ஏனைய கூத்தாடிகள் வரும் பதிப்புகளில் தவறாமல் போற்றப்படுவர். தமிழர்களின் கலாச்ச்சார சீரழிவுக்கும், மொழி சிதைவுக்கும் காரணமே இந்த கூத்தாடிகள் தான். ஆகையால் தமிழக சினிமாவை முதலில் புறக்கணியுங்கள் இவர்களின் ஆட்டம் தானே ஒரு முடிவுக்கு வரும்.

No comments:

Post a Comment