Sunday, 20 February 2011

களப்பிரர் காலம்-3

சமத்துவ மக்கள் கட்சி

இதன் தலைவர் சரத் குமார். நாட்டாமை என்னும் படத்தில் "நெல்லு போட்டால் நெல்லு விளையும் கொள்ளு போட்டால் கொள்ளு விளையும்" என்று விவசாயிகள் அறியாத உண்மையை விவசாயிகளுக்கே புரியவைத்தவர். மேலும் இவர் சூரியவம்சம் படத்தில் ஒரே பாட்டில் எப்படி பணக்காரர் ஆவது என்பது போல பல கருத்துக்களை தமிழ் மக்களுக்கு புரியவைத்தவர்.

ஆகையால் இவர் தமிழகத்தை ஆழ தகுதி உடையவராய் தமிழர்களால் ஆக்கப்பட்டவர். இவர் ச.ம.க வை நிறுவி தொடர்ந்து தீவிர அரசியல் செய்து வருகிறார். இவர் டெபாசிட் போனாலும் கூட கவலையில்லை ஆனால் நாம் ஒரு நாள் ஆட்சியை பிடிக்க மாட்டோமா? என்று ஏங்குபவர்.

எல்லாம் தலைஎழுத்து.......

இளைய தளபதி விஜய்

இவர் டாக்டர் விஜய் என்று போற்றபடுபவர். இவர் படத்தில் வில்லன்களை துவைப்பதால் தளபதி ஆகிவிட்டார். இவர் நடிக்கத பாத்திரமே இல்லை. I.P.S அதிகாரி, ரௌடி, கல்லூரி மானவர் என்று பல கூத்துக்களையும் இவர் செய்துள்ளார். இப்படி படத்தில் நடித்து கைதட்டல் பெற்றதால் இவருக்கும் நாட்டை ஆழ ஆசை வந்து விட்டது. இவரும் அரசியலுக்கு வருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார். இவர்களையெல்லாம் பார்த்ததற்கு பிறகு தான் தெரிந்தது அரசியலை ஏன் சாக்கடை என்கிறார்கள் என்று.

இவர் மீனவர்களுக்கு குரல் கொடுக்கிறார், பல நன்மைகளை மக்களுக்கு செய்கிறார் என்கிறார்கள். எந்த ஒரு செயலுமே அதன் குறிக்கோளை வைத்துத் தான் அது நல்ல செயலா அல்லது அது கெட்ட செயலா என்று முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால் ஒரு ராணுவ வீரன் கொலை வெறியன் என்றே சொல்லப்படுவான். ராணுவ வீரனின் குறிக்கோள் நாட்டை பாதுகாப்பது ஆகையால் அவன் செய்யும் கொலை நல்ல செயல் ஆகிறது. விஜயின் குறிக்கோள் நாட்டை ஆழ வேண்டும் என்பதே தவிர மக்கள் மீது கொண்ட அக்கரை அல்ல.

படத்தில் நடிப்பவர்கள் யாரும் பொருளாதார வல்லுனர்களோ, அரசியல் நிபுணர்களோ அல்ல. இவர்கள் கூத்தாடிகள் இவர்களுக்கு நடிக்க மட்டுமே தெரியும். இவர்கள் திரையரங்கை ஒரு பிரச்சார இடமாக பயன்படுத்தி மக்களிடம் செல்வாக்கை பெறுகிறார்கள். பிறகு அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க போராடுகிறார்கள். ஒரு அறிஞர் ஜனநாயகத்தை பற்றி சொன்னது "11 முட்டாள்களும் 10 அறிவாளிகளும் ஒன்றாய் சேர்ந்து மொத்தம் 21 முட்டாள்களாய் நாட்டை ஆள்வதற்கு பெயர் ஜனநாயகம்". இது தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.

No comments:

Post a Comment