"ஒரு கூடை சன்லைட்; ஒரு கூடை மூன்லைட்; ஒன்றாக சேர்ந்தால் உருவாகும் என்லைட்(enlight)"
enlight என்றால் ஞானம் வருவதாம். நான் ஒரு பொறியாளர் என்பதால் இந்த சிறந்த கொள்கையை படத்துடன் விளக்குவதில் பெருமை அடைகிறேன்.
+
=
இதன் அர்த்தம் தெரிந்த உடனேயே நான் இரண்டு கூடை வாங்கி வந்து சன்லைட்டையும் மூன்லைட்டையும் சேர்த்து வருகிறேன் எனக்கு விரைவில் ஞானம் வந்து விடும் என்று நம்புகிறேன் நீங்களும் விரைவில் ஞானமடைய எனது வாழ்த்துக்கள்.இப்படி பல புதிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்தப்பாடலை நக்கீரர் தலைமையிலான மூன்றாம் தமிழ் சங்கத்தில் அரங்கேற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இன்னும் பல பாடல்களை பார்க்கலாம் அதற்க்கு முன்பு இதோ உங்களுக்காக ஒரு தேச பக்தி பாடல் "ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும் எனக்கு கவலையில்லே......." இது போன்ற பாடலகளை கேட்டு நீங்கள் எதற்கும் கவலைபடாமல் இருங்கள்.
படத்தில் வரும் கவிதைகளில் இதோ ஒரு சாம்பிள்
"என் பேரு சூச; நான் திங்குறது தோச; இப்போ நான் உனக்கு வைக்கப்போறேன் பூச"
இப்படி பட்ட கவிதைக்கு வரதராசனார் போன்ற ஒருவர் வந்து உரை எழுதவேண்டும் என்பதே எனது விருப்பம்.பாரதியாருக்கு பிறக்கு இப்படி ஒரு புது கவிதையை யாராலும் கேட்டிருக்க முடியாது என்பது உறுதி.இப்படி தமிழுக்கு சிறப்பான தொண்டு ஆற்றுவதையே தங்கள் கடமையாக பலர் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தவிர அரசியல் வாதிகள், பெயர் வைப்பது தான் சிறப்பிலும் சிறப்பு. கலைஞர் நகர், கலைஞர் இலவச தொலைக்காட்சி திட்டம், கலைஞர் TV, ஜெயா TV என்று தங்கள் பெயர்களால் ஆன பலவற்றை சொல்லலாம். இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் தான் கட்டிய அணைக்கு கல்லணை என்று தான் பெயரிட்டான். இவர்களின் சிந்தனைக்கு அளவே இல்லை. வரும் காலங்களில் பல ஆறுகள், குளம், குட்டை, சாலை, என அனைத்தும் இவர் பெயரில் இருக்கும் போல தெரிகிறது. இந்தியப் பெருங்கடலின் பெயரை கூட மாற்றி தங்கள் குடும்பத்தின் பெயரை வைத்து அதற்க்கு பெயர்சூட்டு விழ நடத்தினாலும் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
வாழ்க தமிழ்............
No comments:
Post a Comment