தமிழர்கள் தங்கள் பெயர்களை ஆர்யா, விஜய் என்று வட மொழியில்வைக்கிறார்கள் இவர்களால் வரும் காலத்தில் பல ஆண்மகன்கள் சுர்ஜித் சிங் பர்னாலா(தமிழக ஆளுனரை சிறப்பிக்க), நெல்சன் மண்டேலா என்றபெயர்களிலும் பெண்கள் பலர் ஹில்லாரி கிளிண்டன், மனுசா கொய்ராலா என்ற பெயருடனும் தமிழகத்தில் உலா வருவார்கள் போல் தெரிகிறது. இப்படி தங்கள் பிள்ளைகளுக்கு பெயர்வைக்கும் தமிழர்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கூட வேறு மொழி பெயர்கள் தான் வைப்பார்கள் ஜிம்மி, ஜாக்கி, ராக்கி, சீசர், அல் க்ஸ் போன்ற பெயர்கள். இதில் ஒரு சிறப்பு எங்கள் கல்லூரி விடுதி நாயின் பெயர் மார்லி. இது போன்ற பெயர்களை யார் எங்கு கண்டுபிடிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. இது போன்ற புது கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு தமிழ் செம்மொழி விருது தந்து சிறப்பிக்க வேண்டும்.
இதில் இருந்து மாறுபடும் பலர் தங்கள் பெயர்களை bus boarad இல் இருந்துதான் தெரிவு செய்வார்கள் அதாவது ஒரு ஊரின் பெயரை தங்கள் பெயராகவைத்துக்கொள்வார்கள். இப்படி வந்தவை தான் கோபி, பழனி ,திருப்பதிபோன்ற பல பெயர்கள் என்று எனது ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். வரும்காலங்களில் படித்த பல தமிழர்கள் தங்கள் பெயர்களை மாக்கினாம்பட்டி , ஊஞ்சவேலம்பட்டி, பாளையங்கோட்டை என்று மாற்றிக்கொண்டால் அதில்ஆச்சர்யப்படுவதர்க்கு ஒன்றும் இல்லை. நானும் ஒரு தமிழன் அதிலும்படித்த தமிழன் ஆகையால் பிள்ளைகளுக்கு நானும் ஊர் பெயரை வைக்கசொல்வேன் அதிலும் மற்ற நாட்டு ஊரின் பெயர்கள் தான் வைப்பேன் ஆண்பிள்ளைகளுக்கு ஹிரோஷிமா என்றும் பெண் பிள்ளைகளுக்குநாகசாகி(நாகலச்சுமியன் modern name) என்று வைப்பேன். இதை பார்க்கும்பல தமிழ் ஆர்வரளர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு பெய்ஜிங், ஆம்ஸ்டர்டம், காத்மாண்டு என்று பல பெயர்களை வைத்து தமிழைவளர்ப்பார்கள்.
தமிழை வளர்ப்பதில் தமிழ் திரைப்படங்களின் பங்கு பற்றி நான்சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? இப்படி பெயர் வைப்பதைபார்த்த தமிழ் பட தயாரிப்பாளர்கள் முதல் முறையாக விருமாண்டி படத்தில்வந்தத காளைக்கு சொரிமுத்து என்று பெயரிட்டு "தமிழ் பெயர் அறிவுஊற்றுகள்" கூட்டத்தில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தினார்கள்.இதுபோன்ற பல தொண்டுகளை தமிழுக்காக செய்யும் தமிழ் சினிமாவை பற்றிஅடுத்த பகுதியில் தெளிவாக பார்ப்போம்.......
ha ha...very fun and good content
ReplyDeleteநாம் என்னதான் படம் போட்டு சொன்னாலும் வர்ர எரும மாடு தான் வால தூக்கும்... புரிந்தால் சரி
ReplyDelete