Thursday, 14 October 2010

காமன்வெல்த் கல்மாடி

காமன்வெல்த் என்றாலேயே இந்தியர்களுக்கு விளையாட்டை பற்றி தெரிகிறதோ இல்லையோ ஆனால் விளையாடிய கல்மடியை பற்றி நன்றாக தெரியும். இவர் பெயரில் உள்ள மாடிக்கு மட்டும் கல் இருக்கும்( கல் + மாடி) ஆனால் இவர் கட்டும் பாலத்திலோ மண் கூட இருக்காது. அப்படிப்பட்ட தலை சிறந்த கட்டிடகலை வல்லுநர் என்றே இவரை சொல்லலாம்.
அப்படியென்றால் அந்த கட்டிடம் எப்படி இருக்கும் என்று பாருங்கள். இவர் தலைமையில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று விளையாட்டு துவங்குவதற்கு முன்பே இடிந்து விழுந்த்தது ( அது தான் கீழே உள்ள படம்). தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர்கள் இந்த அளவுக்கு சிறந்த கட்டிடக்கலை வல்லுனர்களாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆகையால் இந்தியா வந்த இங்கிலாந்து மகாராணியிடம் இவருக்கு இங்கிலாந்தின் உயரிய விருதான "sir" பட்டம் வழங்க பரிந்துரை செய்கிறேன்.

மதிப்பிற்குரிய கல்மாடி விளையாட்டு துவங்குவதற்கு முன்பு விளையாட்டு வீரர்கள் தங்க கட்டப்பட்ட அறைகள் சும்மா இருக்கக்குடாது என்பதற்காக நாய்களுக்கும், பாம்புகளுக்கும் வாடகைக்கு விட்ட கருணை உள்ளம் படைத்தவர். மேலும் இவர் வீரர்கள் மீது கொண்டுள்ள அக்கரை காரணமாக " பணிகள் நடந்து வருகிறது ஆகையால் மெதுவாக ஓடவும்" என்ற விளம்பர பலகையை 100 மீ ஓடு பாதையில் வைக்க உத்தரவிட்ட மாமனிதர். இவரால் நீச்சல் போட்டிக்கு கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியை பார்த்த ஆசுறேலிய வீரர்கள் "துபாயில் இதை குப்பை தொட்டி என்பார்கள்" என்று புகழ்ந்து கூறினர். இவரால் நம் நாட்டுக்கு ஏற்பட்ட நட்பெயர்க்கு இந்த பாரதியார் பாடலை நாளைய விடியலின் சார்பாக dedicate செய்து கொள்கிறேன்.

"அசிங்கமில்லை, அசிங்கமில்லை, அசிங்கமென்பதில்லையே
இச்சகத்தில் உள்ள நாடுகளெல்லாம் சிரித்து நின்ற போதிலும்
அசிங்கமில்லை, அசிங்கமில்லை, அசிங்கமென்பதில்லையே"

இந்த தீவிர வாதிகளுக்கு அறிவே இல்லை தானாக இடிந்து விழும் கட்டிடத்துக்கு குண்டு வைப்போம், தீ வைப்போம் என்று மிரட்டி குண்டுகளுக்கு உள்ள மான மரியாதையை கெடுக்கின்றனர். ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வாங்க முடியாமல் திணறும் இந்தியா இதில் மட்டும் எப்படி இத்தனை பதக்கம் வாங்குகிறது என்றால் அனைத்தும் கல்மாடியின் தீரிய சிந்தனையே, மற்ற நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதக்கும் சரியாக தராவிட்டால் அவர்களால் சரியாக விளையாட முடியாது அனைத்து பதக்கத்தையும் நாமே சுருட்டிவிடலாம் என கணக்கு போட்டார். இப்படி கணக்கு போட்டு எதிரிகளை புறமுதுகு காட்டி ஓடவைத்ததால் இன்று முதல் நீ எங்களால் "காமன்வெல்த் கல்மாடி" என்று பாசத்தோடு அழைக்கப்படுவாய்.

பாப்பம்பட்டிக்கும், எப்ப்பம்பட்டிக்கும் இடையே நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா வென்ற பதக்கங்களை இந்தியா பாகிஸ்த்தான் எல்லையான வாகாவில் வைத்து சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மொத்த காமன் வெல்த் போட்டிகளின் சிறப்பே இலங்கை அதிபர் வருவதுதான் இவர் வருகையை தடுக்க எந்த தமிழனாலும் முடிவதே இல்லை. எது எப்படியோ வீரர்கள் குவித்த பதக்கத்தை நினைத்து பெருமை படுவீர்களோ அல்லது கல்மாடியை பற்றி வருந்துவீர்களோ அது உங்களுக்குத்தான் தெரியும்.


No comments:

Post a Comment