Thursday, 15 July 2010

எட்டாக் கல்வி .........

இன்று கல்வித்துறையை ஒரு நல்ல வியாபாரமாக்கிவிட்டர்கள். கல்லூரிகளும், பள்ளிகளும் தரமான கல்வியை தருகிறதோ இல்லையோ ஆனால் பணத்தை கொள்ளையடிக்கும் முதலைகளாகவே இருக்கிறது. அதாவது ஆத்தங்கரையிலும், குளத்தங்கரையிலும் உதயமாகும் பல கல்விநிறுவனங்கள் ஆக்ஸ்போர்ட் அளவுக்கு பணத்தை வாங்குகிறது. இதனால் பல மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போகிறது.
பல கல்வி நிறுவனங்கள் ஆரம்பமான பிறகு தான் கட்டிடமே கட்ட ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது கட்டிடப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் வரும் காலத்தில் செங்கல்லும், சிமென்டும் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே சீட் கொடுப்பார்கள். இந்த நிறுவனங்கள் குறைந்த செலவில் சிக்கனமாக செயல்பட நினைப்பதால் குறைந்த சம்பளம் யார் கேட்கிறார்களோ அவர்களையே பணியில் அமர்த்துகிறது. இப்படி நிர்வாகம் நிர்னைக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை மிரட்டுவதே " பேசினால் நான் பாடம் நடத்த ஆரம்பித்து விடுவேன்" என்றுதான். இந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் முறையே தனி a=b+c கரெக்ட் என்றும் a=c+b தவறு என்றும் தான் சொல்லித்தருவார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

தம்பி:அண்ணா மாடியில் உள்ள லைட்(light) எரியமாட்டிங்குது, ஆனால் கீழே இருக்கும் லைட் எரிகிறது, ஏன்?
படித்த அண்ணன்: தம்பி கரண்ட் கமியாக வருது அதனால் கரன்ட்டால் மேட்டுல மாடிக்கு எரமுடியல கீழே உள்ள லைட் பள்ளத்தில் உள்ளதால் கரண்ட் ஈசியாக போகிறது அதனால் கீழ் லைட் எரிகிறது.

படிக்கும் திறமை இருக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வியளிக்க கல்விநிறுவனங்கள் முன்வரவேண்டும். நல்ல கல்விநிறுவனங்கள் உயர்ந்த மரத்திலே பழுத்த உதவாத கனியாக இருக்க கூடாது.

No comments:

Post a Comment