
பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி அறியாமலேயே நம்மில் பலர் அதை பயன்படுத்துகிறோம். இன்று சிறு குழந்தைகள் குடிக்கும் பால் குவளையில் இருந்து வயதானவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் வரை அனைத்திலும் பிளாஸ்டிக் பொருள்களை காணலாம். பிளாஸ்டிக்கால் ஏற்படும் நன்மையை விட தீமையே அதிகம். குறிப்பாக பிளாஸ்டிக் பைகள்(plastic carry bags) ஏற்படுத்தும் மாசு மிகவும் அதிகம். பிளாஸ்டிக் பொருள்கள் மறு சுழற்ச்சிக்கு உட்படுத்தப்படுபவை இதனால் மீண்டும் மீண்டும் மாசு ஏற்படுமே அன்றி இதனால் மாற்றம் ஏதும் வராது. குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் காற்றுக்கு பலவாரு பறந்து செல்கிறது. இப்படி போகும் பிளாஸ்டிக்கை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எரித்தல் காற்றை மாசு படுத்தும், புதைத்தாலும் ஒன்றும் ஆகாது. இப்படி யாருக்கும் அடங்காத பிளாஸ்டிக்கை பற்றி யாரும் பேசுவதில்லை. இதை கலைஞர் தொலைக்காட்சி பாணியில் சொன்னால் இப்படித்தான் சொல்லவேண்டும் "தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கூட சாகமாட்டேன் பிளாஸ்டிக்காகத்தான் மிதப்பேன் நீங்கள் கட்டுமரத்தில் கூட ஏறி பயணம் செய்ய முடையது". இதை புரிந்து கொண்ட ராஜஸ்த்தான் அரசு பிளாஸ்டிக் பொருள்களை ஆகஸ்ட் 1 முதல் தடை செய்தது. நமது
குடிமக்களை பற்றி நன்கு அறிந்த ராஜத்தான் முதல்வர் கடும் சட்டங்களை போட்டுள்ளார். இதில் தடை செய்யப்பட பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்தினால் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 15 இன் படி ஐந்து வருடம் சிறை அல்லது ஒரு இலட்சம் அபராதம் அல்லது இரண்டுமே என்று ஆடி மாத சிறப்பு செய்தியாக அறிவித்தார். சீனா பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் மாசை வெள்ளை புரட்சி என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துகிறார்கள் நம் நாட்டிலோ அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை இந்த விழிப்புணர்வை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை பயன் படுத்துவதை நாம் குறைத்துக்கொண்டால் பிளாஸ்டிக்கின் உற்பத்தி குறையும் பிறகு பிளாஸ்டிக் இல்லாத நிலைமை வரும் மேலும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய அரசு முன்வரவேண்டும்.இப்படி செய்தல் பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் மலரும்.
No comments:
Post a Comment